விவசயிகளே ! 1500 மெ.டன்‌ யூரியா உர மூட்டைகள்‌ வருகை ; உடனே வாங்கிகொள்ளுங்கள்...

SSP உரத்தில்‌ 16% மணிச்சத்து மற்றும்‌ சல்பர்‌, கால்சியம்‌ போன்ற நுண்ணூட்ட உரங்கள்‌ சிறிதளவு உள்ளன.

Continues below advertisement

விழுப்புரம் : முண்டியம்பாக்கம்‌ ரயில்‌ நியையத்திற்கு 1500 மெ.டன்‌ யூரியா உரமூட்டைகள் வருகை, வேளாண்மை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு.

Continues below advertisement

KRIBHCO உர நிறுவனத்தின்‌ 1500 மெ.டன்‌ யூரியா உர மூட்டைகள்‌

முண்டியம்பாக்கம்‌ ரயில்‌ நிலையத்திற்கு சரக்கு ரயில்‌ மூலம்‌ சூரத்‌ இரயில்‌ நிலையத்தில்‌ இருந்து KRIBHCO உர நிறுவனத்தின்‌ 1500 மெ.டன்‌ யூரியா உர மூட்டைகள்‌ விழுப்புரம்‌ மாவட்ட விவசாயிகள்‌ பயன்பாட்டிற்கு வந்தது.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ தற்போது சம்பா நெல்‌ சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள்‌ மேற்கொண்டுள்ளனர்‌. மேலும்‌ உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும்‌ தோட்டக்கலை பயிர்கள்‌ சாகுபடியில்‌ விவசாயிகள்‌ ஈடுபட்டுள்ளனர்‌.

தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 5079 மெ.டன்‌, டி.ஏ.பி. 2148 மெ.டண்‌, பொட்டாஷ்‌ 1240 மெ.டன்‌, காம்ப்ளெக்ஸ்‌ 5360 மெடன்‌ , சூப்பர்‌ பாஸ்பேட்‌ 1434 மெ.டன்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ சில்லரை விற்பனை நிலையங்கள்‌ ஆகியவற்றில்‌ இருப்பு வைக்கப்பட்டு விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

சம்பா நெல்‌ சாகுபடிக்கு தேவையான உரங்கள்‌ பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது

இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத்‌ திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள்‌ பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்‌ தற்போது சம்பா நெல்‌ சாகுபடிக்கு தேவையான உரங்கள்‌ பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில்‌ KRIBHCO நிறுவனத்தில்‌ ஒருந்து சரக்கு ரயிலில்‌ உர மூட்டைகள்‌ வந்தன. மொத்தம்‌ 7500 மெ.டன்‌ யூரியா உரமூட்டைகள்‌ வந்தது. இதில்‌ விழுப்புரம்‌ மாவட்டத்திற்கு 1100 மெ.டன்‌ , கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 400 மெ.டன்‌ உர மூட்டைகள்‌ விவசாயிகளுக்கு பயன்படும்‌ வகையில்‌ அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில்‌ அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும்‌ டி.ஏ.பி உரத்துக்கு பதிலாக விலை குறைந்த SSP உரத்தை விவசாயிகள்‌ பயன்படுத்தலாம்‌. SSP உரத்தில்‌ 16% மணிச்சத்து மற்றும்‌ சல்பர்‌, கால்சியம்‌ போன்ற நுண்ணூட்ட உரங்கள்‌ சிறிதளவு உள்ளன என்று வேளாண்மை உதவி இயக்குநர்‌(தகவல்‌ & தரக்கட்டுப்பாடு), எம்‌.என்‌.விஜயகுமார்‌ தெரிவித்துள்ளார்‌.

யூரியா (Urea) பற்றிய சில தகவல்கள்...

யூரியா (Urea) என்பது CO(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பமைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அமைடு மூலக்கூறில் இரண்டு அமீன் ( –NH2) குழுக்கள் ஒரு கார்பனைல் (C=O) வேதி வினைக்குழுவால் இணைக்கப்பட்டிருக்கும்.

நைட்ரசன் அடங்கிய சேர்மங்களை விலங்குகள் செரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் யூரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவே பாலூட்டிகளின் சிறுநீரில் கலந்திருக்கும் நைட்ரசன் உள்ள முதன்மையான பொருளாகும். யூரியா நிறமற்றும் நெடியற்றும் உள்ள திண்மமாகும். நீரில் இது நன்றாகக் கரையும். நடைமுறையில் பொதுவாக யூரியா நச்சுத்தன்மையற்று காணப்படுகிறது. எலிகளில் இதன் உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 15 கிராம் மட்டுமேயாகும் . நீரில் கரைந்திருக்கும்போது இது காடியாவோ காரமாகவோ இருப்பதில்லை.

விலங்கு உடலானது யூரியாவை பல செயல்முறைகளில் பயன்படுத்திக் கொள்கிறது. பின்னர் குறிப்பாக நைட்ரசன் கழிவாக வெளியேற்றுகிறது. கல்லீரலில் நடைபெறும் யூரியா சுழற்சியின் போது இரண்டு அமோனியா ((NH3)) மூலக்கூறுகளுடன் ஒரு கார்பனீராக்சைடு (CO2) மூலக்கூறு சேர்ந்து யூரியா தயாரிக்கப்படுகிறது. உரங்களில் ஒரு நைட்ரசன் (N) மூலப்பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேதித் தொழிற்சாலைகளில் ஒரு தாதுப் பொருளாகவும் யூரியா முக்கியத்துவம் பெறுகிறது.

1828 ஆம் ஆண்டு பிரடெரிக் வோலர் கனிமச் சேர்மங்களிலிருந்து செயற்கை முறையில் யூரியாவை தயாரித்தது வேதியியல் துறையில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். முன்னதாக ஓர் உடன் விளைபொருளாக மட்டுமே அறியப்பட்ட யூரியா என்ற வேதிப்பொருள் உயிரியல் தொடக்கப் பொருட்கள் இல்லாமல் ஆய்வகத்தில் செயற்கை முறையில் ஒருங்கிணைத்து தயாரிக்க முடியும் என்பதை இக்கண்டுபிடிப்பு முதன்முறையாகக் காட்டியது. பரவலாக நம்பப்பட்டுவந்த உயிர்வாழும் கோட்பாட்டிற்கு முரணாகவும் இது அமைந்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola