விழுப்புரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். 2023-24ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் போது துறை அமைச்சர், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.


விழுப்புரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்பந்தயம்  நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை அமைச்சர் பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு ஆர்வளர்கள், அரசு அலுவலகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டரும் போட்டி  நடத்தப்பட்டது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இதே தொலைவில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் நான்கு முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார்... இதற்கு ஏன் ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி


பிரதமரும், ஆளுநரும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள் - அமைச்சர் பொன்முடி


விக்கிரவாண்டியில் பரபரப்பு: திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்- என்ன காரணம்?