விழுப்புரம்: பட்டம் கொடுக்க வேண்டிய ஆளுநர் பூணூல் அணிவித்து வருகிறார். இதற்கு ஏன் ஆளுநர் என கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தமிழ்நாட்டில் தான் நடக்கிறது இதனை பிரதமர் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.


கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக பொறியியல் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு தலைப்புகளில் கலைஞர் குறித்து அவர்கள் பேசிய நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு ஐந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு மூன்றாயிரம் ரூவாயும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.


அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி:


தமிழ்நாட்டில் தான் அனைத்து சாதியினரும் சமம் என்ற உணர்வோடு கோயிலுக்கு செல்வது தமிழ்நாட்டில் தான். ஒரு காலத்தில் கோயிலுக்குள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. நந்தனார் கோயிலுக்கு சென்றதால் தான் சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் மூடப்பட்டு கிடைக்கிறது. இன்றும் தெற்கு வாசல் திறக்கப்படாமல் உள்ளது. நந்தனார் குருபூஜர் ஆளுநர் பூனூள் அனிவிக்கிறார். ஆளுநர் பட்டம் கொடுக்கலாம் பூணூல் அணிவிக்கலாமா. இது தேவையா. பூணூல் அணிவிப்பது ஒரு நிகழ்வாக என கேள்வி எழுப்பினர் அமைச்சர் பொன்முடி. ஒரு காலத்தில் ஒரு தரப்பினர் மட்டுமே அனிந்திருந்தனர். பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர். என அவர்களில் முதல் மூன்று வர்த்தார் மட்டுமே பூணூல் வினிவார்கள்.


பார்ப்பனர்கள் மட்டுமே பஞ்சில் செயத நூலில் பூனூள் அனிய வேண்டும். சூத்திரர்கள் பூனூள் அனியக்கூடாது. கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை, தமிழில் மந்திரம் சொல்ல முடியாத நிலை இதனை எல்லாம் மாற்றியமைத்து தமிழில் அர்ச்சனை செய்யலாம் என சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலானம் என்பதை நடைமுறைப்படுதிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்றால் இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறது, வட நாட்டில் கிடையாது இதனை பாரத பிரதமர் தெரிந்துக்கொள்ள வேண்டும் என பேசினார்.