மத்திய அரசு சார்பில் மீன்வளத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை இரால் குஞ்சு பொரிப்பகங்களின் மின் கட்டணத்தில் பயன்படுத்தி மின்கட்டணத்தை குறைத்தால் மீன் வளர்ப்பு துறை வளர்ச்சி பெறும் என ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ராவோ தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மஞ்சக்குப்பம் தனியார் விடுதியில் இறால் குஞ்சு பொரிப்பது உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறால் குஞ்சு பொறிப்பது உரிமையாளராக இருந்து தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள மஸ்தான் ராவோ என்பவரை இறால் குஞ்சு பொரிப்பது உரிமையாளர்கள் அனைவரும் பாராட்டி கௌரவித்தனர், இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இறால் குஞ்சு பொறிப்பக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்,


செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ராவோ கூறியதாவது:-


இறால் குஞ்சு பொறிப்பகம் தொழிலை பொறுத்தவரை பாண்டிச்சேரி, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் நல்ல விதைகள் கிடைப்பதாகவும் அதை வாங்குவதற்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகை புரிகின்றனர். இது மிக பெருமையான விஷயம், தற்போது மீன் வளர்ப்பு துறை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, காரணம் தரமான விதைகள் வழங்குவதற்கு ப்ளூ ஸ்டார்க் எனும் விதையை தரமாக தயாரித்து அதை அனைத்து பொறிப்பகங்களுக்கும் கொடுக்க மாநில அரசு முன்வர வேண்டும், ஆனால் மத்தியரசானாலும் மாநிலஅரசானாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை செய்வதில்லை, பாஜக ஆட்சி அமைத்து உடன் மீன்வளத்துறை எனும் துறையை உருவாக்கி அந்தத் துறைக்கு அதிக நிதியை கொடுத்தனர், கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பயன்படுத்த முடியாமல் சென்று விட்டது, இதன் காரணமாக 20,000 கோடி வீணாக செல்கிறது.


எனவே தமிழக எம்பிக்கள் மற்றும் ஆந்திர எம்பிக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மீன்வளத் துறையின் அமைச்சரை நேரடியாக சந்தித்து தமிழக மற்றும் ஆந்திர ஆகிய பகுதிகளில் மீன் வளர்ப்பு துறைக்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளதால் அந்த துறைக்கு வழங்கப்படும் மின்சார கட்டணத்தை குறைத்து மீன்வளத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை மாநில அரசுகள் மூலம் அதில் பயன்படுத்தி மின்சார கட்டணம் ஒரு ரூபாய் என கொடுத்தால் மீன் வளர்ப்பு துறையும் வளரும் பல்வேறு மக்களும் பயன்பெறுவர், பல்வேறு இடங்களில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் போது மீன் வளர்ப்பு துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ரூபாய் என மின்சாரகட்டணம் கொடுத்தால்  பல நபர்களில் இந்த தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும் என  தெரிவித்தார்.


மீன் வளர்ப்பு துறையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஒரு கோடிக்கு மேல் பணியாளர்கள் உள்ளனர்,  எனவே மாநில அரசுகள் ஒரு புதிய பொறிப்பகத்தை உருவாக்கி அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது என்பது பெரிய விஷயம் அல்ல, எனவே அதை செய்தால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுவார்கள் மீன் வளர்ப்பு துறை மற்றும் குஞ்சு பொறிப்பகங்கள் ஆகியவற்றால் தான் நான் வளர்ந்தவன் என்பதால் இதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும் இதை நான் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


 இந்த துறையில் இருந்து சென்ற முதல் நபரும் நான் தான் என தெரிவித்தார், இறால் குஞ்சு பொறிப்பகங்கள் எம்.எஸ்.எம்-இல் பதிவு செய்வதை தற்போது முழுமையாக நிறுத்தி விட்டார்கள் அது இருந்திருந்தால் பொறிப்பகங்களின்  மின்கட்டணம் குறைவாக இருந்திருக்கும், தமிழகத்தில் தற்போது உள்ள திமுக அரசு மீன் வளர்ப்பு துறையை ஊக்குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, அவர்களுக்கு மீன் வளர்ப்பு சங்கத்தின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்தார். மீன் வளர்ப்பு தொழிலாளல் தற்போது பல நன்மைகள் உள்ளது எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் துணை புரிந்தால் மீன் வளர்ப்பு தொழில் மூலம் பலர் பயனடைவார்கள் என தெரிவித்தார்.