விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் அதிமுக, பாமக கவுன்சிலர்கள் இருவருக்கு திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாக கூறி காணை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இன்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலையே பாமக ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் மற்றும் அதிமுக கவுன்சிலர் பர்குணன் ஆகிய இருவருக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகவும் கடந்த கூட்டத்தின் போது ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் 2 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் திமுக கவுன்சிலருக்கு மட்டுமே வழங்கப்படுள்ளதாகவும் மாற்று கட்சியை சார்ந்தவர்களுக்கு வழங்கவில்லை என கூறி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் இரு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தினை நிறைவு செய்தனர். இது தொடர்பாக கவுன்சிலர்கள் கூறுகையில், எப்போதும் காணை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றாலும் திமுகவின் கவுன்சிலர்கள் 18 பேர் இருப்பதால் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக கூறி அரை மணி நேரத்திற்குள் கூட்டத்தினை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி முடித்துவிடுவதாக இரு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் எந்த ஒரு மக்கள் திட்டத்திற்கும் அனுமதி தராமல் தடுத்து வருகின்றனர். குறிப்பாக திமுக, பாமக கட்சி கவுன்சிலர்களை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக கூறுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்