போலியாக லெட்டர் பேட், கையெழுத்திட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது குற்றச்சாட்டி கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து , நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் A.M.P.முத்துகண்ணு, மற்றும் 13 ஒன்றியகுழு வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

 

இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஆன வள்ளி சந்திரசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோட்டாட்சியர் இடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக தன் பெயரில் கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் தனது லெட்டர் பேட் இல்லை எனவும் மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் கையெழுத்தும் போலியானது என்றும், தனது பெயரை பயன்படுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள கடிதம் போலியானது அதிலும் தான் கையொப்பம் இடவில்லை. மேலும் தான் விருத்தாசலம் கோட்டாட்சியர் அவர்களை நேரில் சந்திக்கவே இல்லை.மேற்படி தான் போட்டதாக கூறும் இரண்டு கையொப்பங்களில் கீழ் என் பெயரில் வைக்கப்பட்டுள்ள சீல் போலியானது. 

 



 

ஆதாரமாக அதில் என்னுடைய முதல் எழுத்து C என குறிப்பிடுவதற்கு பதிலாக S என்று தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் முறைகேடாக நடைபெற்ற இந்த விதிமுறைகள் படி, நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுக்க வேண்டும். எனவும் இவ்வாறாக தனது பெயரை பயன்படுத்தி இவ்வளவு நடந்தது தனக்கு முதலில் தெரியவே தெரியாது பின்னர் ஒன்றிய குழு சார்பில் என்னிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது தான் இந்த சம்பவமே தனக்கு தெரியும்.

 



 

ஆகவே தனது பெயரை தான் அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தி மோசடி செய்து, ஆள் மாறாட்டம் செய்து, போலியாக சீல் செய்து, மேலும் தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கோட்டாட்சியரிடம் மனு அளித்தது என பல குற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டு உள்ள நல்லூர் ஒன்றிய 13வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் AMP முத்துக்கண்ணு மற்றும் அவரோடு மேற்படி குற்றத்திற்கு துணைப்போனவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார், மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்களும் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதாக வள்ளி சந்திரசேகர் கூறினார்