விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஏபிபிநாடு சிறப்பு நேர்காணலின்போது தமிழக அரசியல் மாண்பை சீர்குலைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில், பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கமும், இந்திய அரசும் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் பிரபாகரன் இறந்ததற்கான சான்றுகளை அவர் வழங்கியுள்ளதாகவும் மேலும் இதற்கு இந்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு வைக்கலாம் அல்லது கடந்த ஆட்சியில் செய்த நன்மைகளை கூறி வாக்குகளை சேகரிக்கலாம். ஆனால் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி தமிழக அரசியல் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அவர் தோல்வி பயத்தில் இது போன்ற பேசி வருவதாகவும், அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணியில் யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை, மேலும் திமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால் அத்தகைய நேரத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அதற்கான முடிவை எடுப்பார் எனவும் தற்போது வரை இதுபோன்ற தகவல்கள் யூகத்தின் அடிப்படையில் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்