விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மலைப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை கரடியால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறை அதிகாரிகள் கரடியை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கோணை ஊராட்சிக்கு உட்பட்ட சோமசமுத்திரம், வடகால் ஆகிய பகுதிகளில் மலை அருகே உள்ள வயல்வெளியில் நேற்று மாலை வேளையில் கரடி ஒன்று சுற்றி திரிந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த கரடியை சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து பேசிய பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் இப்பகுதி அருகில் பாக்கம் மலைக்காடு, முட்டுக்காடு ஆகியவை அமைந்துள்ளதால் கரடி அங்கிருந்து வந்திருக்க கூடும் என்றும் அந்தக் கரடியால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும் முன் வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்