தியேட்டரில் விற்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் கிடந்த பல்லி - வாடிக்கையாளர் அதிர்ச்சி

புதுச்சேரி தியேட்டரில் விற்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் கிடந்த பல்லி - உணவு பாதுகாப்புத் துறை விசாரணை.

Continues below advertisement

 புதுச்சேரி மாநிலம் ராஜீவ்காந்தி சிக்னல் அருகே முருகா தியேட்டர் உள்ளது. தற்போது இந்த திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் திரைப்படம் பார்க்க சென்ற ஒரு குடும்பத்தினர் திரையரங்கில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துள்ளனர்.

Continues below advertisement

அப்பொழுது பாட்டிலின் உள்ளே பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓட்டல் கடை ஊழியரிடம் குடிக்கும் குடிநீர் பாட்டிலில் பல்லி இருப்பது கூட தெரியாமல் விற்கிறீர்களே. குடிக்கிற தண்ணீரில் கூட இப்படியா? நீங்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவது போல் திரையரங்குகளுக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola