விழுப்புரம் : திண்டிவனம் அருகே தந்தை மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அன்னம்பாக்கம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 60). இவரது மகன் அரிபிரசாந்த் (27) இவர் மருந்தகங்களுக்கு மருந்து வினியோகிக்கும் பணி செய்து வருகிறார். தந்தை மகன் இருவரும் ஒரே கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
Annamalai Speech : ”பேரறிவாளன் நிரபராதி என எங்கும் குறிப்பிடவில்லை” - பாஜக அண்ணாமலை
விநாயகம் மனைவி மலர்விழி அவரது மகள் எழிலரசி என்பவருக்கு குழந்தை பிறந்ததால் மகள் வீட்டில் தங்கி வருகிறார். இவரது மகன் ரஞ்சித் செல்வம் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் விநாயகம் அவரது மகன் அரிபிரசாத் ஆகிய இருவரும் கிராமத்தில் தங்கி வசித்து வந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அரிபிரசாந்த் குடிபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது விநாயகம் குடிபோதையில் அரிவாளால் மகனை முகத்தில் சரமாரியாக வெட்டினார்.
Chidambaram Temple : எதிர்த்த தீட்சிதர்கள்..போலீசார் பாதுகாப்புடன் கனகசபையில் நுழைந்த பக்தர்கள்
Vijay Politics : 4 மாதத்தில் 3 முதல்வர்களை சந்தித்த நடிகர் விஜய்... 2024க்கு தயாராகும் மெகா திட்டம்!
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது ஹரிபிரசாத் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி ஹரி பிரசாத் பலியானார். இது குறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குடிபோதையில் தந்தை, மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
H Raja Speech : “கோயில் காண்ட்ராக்ட்டை முஸ்லீமுக்கு எப்படி கொடுக்கலாம்..” கொந்தளித்த ஹெச்.ராஜா..
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்