புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறித்த 6 வாலிபர்களை 5 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். லாரி டிரைவர் திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). லாரி டிரைவர். இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு லோடு ஏற்றி வந்தார். அன்று இரவு 8 மணியளவில் லாரியை அந்த கம்பெனியில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட நடந்து சென்றார்.


Karur Mayor Kavitha Inspection | ”இது மார்க்கெட்டா? பஸ் ஸ்டாண்டா?” அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மேயர்



அப்போது ஒரு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் விஜயகுமாரை வழிமறித்து தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது.  இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்த முகேஷ் கண்ணன் (23), தமிழரசன் (21), அஜித் (23), அருள்குமார் (19), மாதவன் (21), சுரேந்தர் (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர்கள் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே முகேஷ் கண்ணன் உள்பட 6 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


Ponmudi Speech : ”இந்தி படிச்சா.. கோயம்பத்தூரில் பானி பூரி தான் விற்கலாம்” அமைச்சர் பொன்முடி!


அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடிப்பதற்காக லாரி டிரைவர் விஜயகுமாரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண