புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சார்ந்த 54 வயது நபர், 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரியை சார்ந்த பாஸ்கல் என்பவர் தனது நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 54 வயதான இவர் தனது உறவினரான கணவரை இழந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை புதுச்சேரியில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 75 வயதானவருக்கும் 26 இளம் பெண்ணுக்கும் திருமண நடைபெற்றது என தவறாக பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரிக்கையில் பாஸ்கல் மற்றும் அந்தப் பெண்ணும் திருமணம் செய்து வாழும் எண்ணத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்ததாகவும், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ் செல்ல முடியாததால் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்