விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலை விபத்தில் தந்தை, தாய், மகன் உட்பட  3 பேர் பலியானர்கள். ராணிப்பேட்டை மாவட்டம்  கலைவை  தாலுக்கா கீரம் பாடி  பகுதியைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன் வயது 60.  இவருடைய தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் இறந்து விட்டார். நேற்று முன்தினம் அவருக்கு முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன் (வயது 60) அவரது மனைவி சாந்தி (வயது 52)  அவரது மகன் அழகுவேல் ராஜாமற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி (வயது 22) ஆகியோர் பங்கேற்றுவிட்டு அன்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வளத்தி  - அருள் நாடு கல்லறை அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது.


இதில் சம்பவ இடத்திலேயே  ராஜேந்திரன் அவருடைய மனைவி சாந்தி மற்றும் அவரது மகன் அழகு ராஜா உள்ளிட்டோர் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.  மேலும்   மதுரையைச் சேர்ந்த  சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அறிந்த செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின்  உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வளத்தி போலீசார்  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம் வாடி சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் வயது 28 கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். செஞ்சி அருகே சாலை விபத்தில் தந்தை தாய் மகன் உட்பட  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண