விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பேருந்தும் காவலர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காவல் உதவி ஆய்வாளர் ஓட்டுனர் என நான்குபேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காவல்துறை வாகனம் - அரசு பேருந்து மோதல்
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி காவலர்கள் வேனில் விழுப்புரம் வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது காவலர் வேன் விராட்டிக்குப்பம் சாலை அருகே வந்தபோது எதிர் திசையில் திருச்சியிலிருந்து வந்த அரசு பேருந்தும் காவலர் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார், வேன் ஓட்டுனர்,அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து பயணிகள் காயமடைந்தனர்.
காவலர்கள் படுகாயம்
இதில் வேனில் பயணித்த காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் வேன் ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் விசிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது வாகனங்கள் திருப்பி விடப்பட்டிருந்தது.