சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான செல்வகுமார். இவர் அப்பகுதியில் டைல்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானத்தில் தனது உறவினர் வீடு கட்டுவதற்காக டைல்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சாதனப் பொருட்களை ஒரு மினி டெம்போவில் ஏற்றிக் கொண்டு சீர்காழி நோக்கி சென்றுள்ளார். இந்த வாகனத்தை சேலத்தைச் சேர்ந்த டிரைவர் 25 வயதான நகுலேஸ்வரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.




ABP EXCLUSIVE: ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயிற்சி..உலக சாம்பியன்தான் இலக்கு - பிரக்ஞானந்தா பயிற்சியாளர் பேட்டி!


இந்த மினி டெம்போ வாகனத்தில் செல்வகுமார், அவரது மனைவியின் தங்கை 27 வயதான கற்பகவள்ளி, செல்வகுமாரின் 3 வயது மகன் மிதுன், ஆகியோர் வாகனத்தின் முன்புறம் உட்கார்ந்து இருந்தனர். வாகனத்தின் பின்புறம் அவரது உறவினர்கள் 34 வயதான சிவக்குமார், கருப்புசாமி, பெருமாள், ஆகிய 3 பேரும் அமர்ந்து பயணித்துள்ளனர்.




BJP Cadre Murdered : இந்த 3 ரவுடிகள்தான்! பாஜக நிர்வாகி கொலையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்! தீவிர தேடுதல் வேட்டை!


இந்த சூழலில் இந்த மினிடெம்போ வாகனம் இன்று அதிகாலை சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள கூத்தன்கோயில் என்ற இடத்தின் அருகே வந்தது. அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜல்லி ஏற்றிய லாரி ஒன்றின் மீது டெம்போ எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வக்குமார் அவரது உறவினர் கற்பகவள்ளி, மகன் மிதுன் மற்றும் டெம்போ ஓட்டுநர் நகுலேஸ்வரன்  ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.




Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!


வாகனத்தில் பின்புறம் அமர்ந்து இருந்த சிவகுமார், கருப்புசாமி, பெருமாள் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள்  அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 தந்தை மகன் என 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.