மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதற்கான உத்தரவு அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport
Supriya Sule Latest | ‘இதுதான் அரசியல்’... பாய்ண்ட்டுகளை அடுக்கிய சுப்ரியா சூலே | Parliament Speech
நாடு முழுவதும் கொரோன பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஓராண்டுக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதாவது 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இது நடைமுறைக்கு வந்தது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport
Supriya Sule Latest | ‘இதுதான் அரசியல்’... பாய்ண்ட்டுகளை அடுக்கிய சுப்ரியா சூலே | Parliament Speech
இதன்மூலம் 28 சதவீதம் அகவிலைப்படியானது 31 சதவீதமாக கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த 1.1.2022 முதல் 3 சதவீதம் உயர்ந்தது. அதன்படி 34 சதவீதமானது. இது புதுச்சேரியிலும் கடந்த ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வந்துள்ளதாக நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் இன்று அனைத்து செயலர்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியத் தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
Thirumavalavan Latest Speech | “நீதித்துறையிலும் மோடிகள், அமித்ஷாக்கள்”...திருமா பேச்சு | Judiciary
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்