விழுப்புரம்: பொங்கல் பண்டிகை சிறப்பு அதிரடி சோதனையில் 123 நபர்கள்‌ மீது வழக்குப் பதிவு

பொங்கல் பண்டிகையின் சிறப்பு அதிரடி சோதனையில் 123 நபர்கள்‌ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Continues below advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையில் ஈடுபட உள்ளனர். இவர்கள் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து பணிகள், குற்றச்சம்பவங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சினிமா தியேட்டர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகையை அமைதியாக கொண்டாட, மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சாராயம், குட்கா, கஞ்சா போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், பழைய ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

மாவட்டம்‌ முழுவதும்‌ 30 இடங்களுக்கு மேலாக வாகன தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதின்‌ பேரில்‌ நேற்று  (16.01,2023) மட்டும்‌ வாகனத் தணிக்கையில்‌ பதிவெண்‌ இல்லாத மற்றும்‌ ஆவணங்கள்‌ இல்லாத இருசக்கர வாகனங்கள்‌ 51 வாகனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது. கஞ்சா 2 வழக்குகள்‌ பதியசெய்யப்பட்டு 3 நபர்களும்‌, குட்கா 8 வழக்குகளில்‌ - 9 நபர்கள்‌, 48 சாராய வழக்குகளில்‌ 48 நபர்களும்‌, கேம்லிங்‌ 2 வழக்கில்‌ 6 நபர்கள்‌, 1 விபச்சார வழக்கில்‌ 2 நபர்கள்‌, நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ உள்ள வாரண்ட்டுகளில்‌ 2 நபர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. பழங்குற்றவாளிகள்‌ 1 நபருக்கு நன்னடத்தை சான்று பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில்‌ எவ்வித அசம்பாவிதங்களும்‌ நடைபெறாவண்ணம்‌ மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில்‌ இன்று மட்டும்‌ மேற்கண்ட 123 நபர்கள்‌ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்‌ பண்டிகை விடுப்பு முடித்து சொந்த ஊர்‌ மற்றும்‌ பணிக்கு செல்லும்‌ பயணிகள்‌ பாதுகாப்பாகவும்‌, சாலைவிதிகளை பின்பற்றி செல்லவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ ஏதேனும்‌ புகார்களுக்கு அழைக்க: 94981-00485, 04146-222172, போதைப்பொருட்கள்‌ தொடர்பான புகார்களுக்கு : 73581-56100 இந்த எண்ணில்தகவல் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

Continues below advertisement