Pongal 2023: விழுப்புரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை - குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது

பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

Continues below advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல் துறையில் ஈடுபட உள்ளனர். இவர்கள் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து பணிகள், குற்ற சம்பவங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சினிமா தியேட்டர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகையை அமைதியாக கொண்டாட, மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சாராயம், குட்கா, கஞ்சா போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், பழைய ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை சரித்திர குற்றவாளிகள் 16 பேரும், கஞ்சா, குட்கா, சாராய வழக்குகளில் 74 பேரும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர பழைய குற்றவாளிகள் 101 பேருக்கு நன்னடத்தை சான்று பெறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏதேனும் புகார்களை தெரிவிக்க 94981 00485, 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களிலும், போதைப்பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 73581 56100 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement