புதுச்சேரியில்  15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதுவையில், தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். 


பின்னர் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:-


புதுச்சேரி  சுகாதாரதுறையை பாராட்டுகிறேன். புதுவையில் 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 58 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இன்னும் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட வேண்டும். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களை பார்த்து பயந்த, திட்டிய பெரியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், இளைஞர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை. பெரியவர்களை விட இளையவர்கள் மிக பொறுப்பானவர்கள். கொரோனா இல்லாத காலத்தில் இந்த இளைஞர்கள் வாழ வேண்டும். 




விழாவில் பூக்கொத்து கொடுக்காமல் தேவையான புத்தகங்களை அளித்திருப்பது பாராட்டத்தக்கது. தடுப்பூசியுடன் சத்தான உணவு அவசியம். பீசா, பர்கரில் சத்து இல்லை. நவதானியம் சாப்பிடுங்கள். கேரட்டை கடித்து சாப்பிடுங்கள். எலுமிச்சை சாறு குடியுங்கள். ரூ.150 கோடிக்கு மேல் நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை பெருமையுடன் கூற வேண்டும். தெலுங்கானாவில் உள்ள பயோடெக் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 


24 மணி நேரமும் ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஊக்கமளித்தார். நாம் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.  அன்றைய பாடத்தை அன்றே படியுங்கள். மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக வர வேண்டும். எந்த காரணத்திற்கும் மகிழ்ச்சியை தொலைக்காதீர்கள். கஷ்டத்தை ஆசிரியர்களிடம் கூறுங்கள். பெரியவர்கள் தடுப்பூசிக்கு  பயந்து ஓடினார்கள். குழந்தைகளில் சுணக்கம் இல்லை. இனி பெரியவர்கள் தடுப்பூசி போட மாட்டேன் என்பது மன்னிக்க கூடியதில்லை. 


பல மாநிலங்களில் வேகமாக நோய் பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்களை தொற்று அபாயகரமாக தாக்குவதில்லை. புதுவையில் தேசிய இளைஞர் விழாவை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பள்ளி மாணவர்களின் அக்கறையில்  ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண 


 


Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )


Calculate The Age Through Age Calculator