ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை துப்பாக்கி குண்டுபட்ட காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வனப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட கணவாய் வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. 


42 வயது யானை பலி


இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு 42 வயது மதிக்கக்க மக்னா யானை மர்மமான முறையில், துப்பாக்கி குண்டுபட்ட காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள்  வரவழைக்கப்பட்டு, வனப்பகுதியில் உயிரிழந்த யானையை உடற்கூராய்வு செய்து அங்கியே புதைத்தனர்.


காட்டு யானையை மர்ம நபர்கள் யாராவது சுட்டுக் கொன்றனரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானை உயிரிழப்பு குறித்த முழு விவரம் உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு தெரிவித்துள்ளார். 


விசாரணைக்குழு


நாளை (04.07.22) திங்கட்கிழமை இவ்வறிக்கை கிடைக்கப்பெறும் என்றும், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு தெரிவித்தார்.


மக்னா யானை


மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண் யானைகள் மக்னா யானை என அழைக்கப்படுகின்றன. தந்தங்கள் கொண்ட ஆண் யானைகளுடன் மட்டுமே பெண் யானைகள் இணை சேர்கின்றன. தந்தங்கள் இல்லாத மக்னா யானைகளுடன் பெண் யானைகள் இணை சேர்வதில்லை.


இந்த யானைகளை ஆண் யானைகளும் தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. தந்தமற்ற மக்னா யானைகள் பிற பெண் மற்றும் ஆண் யானைகளின் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவதால், இவைகள் தனியாக வாழ்கின்றன என விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


தந்தமற்ற மக்னா யானையால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து வாழ முடியாததால் இவை மூர்க்கத்தனத்தனமாக நடந்து கொள்ளும் நிலையில், பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இவை இருப்பதாக யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் மூர்க்கத்தனமான மக்னா யானையை, வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து யானை முகாம்களில் வளர்க்கும் போது இயல்பாக காணப்படுகின்றன.


மேலும் படிக்க: Elephant Gandhimathi : நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு தோல் செருப்பு அணிவித்த பக்தர்கள்.. சுவாரஸ்யம் இதுதான்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண