ஆற்காடு அருகே அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்த தனியார் பஸ் கண்டக்டரை , 5 பேர் கொண்ட கும்பல் கோயில் வாசலிலே வைத்து பீர் பட்டலால் குத்தி கொலை செய்துள்ளனர் . அவரை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பாவையும் பீர் பாடலால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நெல்லியம்மன் கோவில் உள்ளது , நேற்று ஆடி செவ்வாய் கிழமையை  முன்னிட்டு இங்குள்ள  நெல்லியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டது .


நெல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு , நேற்று மதியம் கூழ் வார்த்தல் திருவிழாவும் , இதனை தொடர்ந்து இரவு , நெல்லியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது .




இதில் இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது , சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (வயது 30 ) என்பவர் , தனது நண்பர்களான ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசு (35) கேசவன்(36) ஹேம பிரசாத் (35) மற்றும் ஹரிஷ் (29) உள்ளிட்ட நாள் வரை அம்மன் திருவீதி உலாவிற்கு அழைத்து வந்துள்ளார் . 


அப்பொழுது கிரிவசன் உட்பட 5 பேரும் மது போதையில் இருந்துள்ளனர்.  மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தின் முன் குத்தாட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்ட ஊர் பெரியவர்கள்  போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்து அனுப்பிவைத்தனர் . சாமி ஊர்வலத்தில் இருந்து களைந்து வந்த கிரிராசன் மட்டும் அவரது நண்பர்கள்  , கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் .




இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த , தனியார் பஸ் நடத்துனரான நாகேந்திரன் (30 ) அவர்களை தட்டிக்கேட்டுள்ளார் . ஏற்கனவே கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டலால் , சரமாரியாக தாக்கியுள்ளனர் . நாகேந்திரனை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பா ரகுவரன் (45 ) என்பவரையும் பீர் பட்டில்களால் தாக்கினர்  .


அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப் பகுதிக்கு ஓடிவந்த சர்வந்தாங்கல் பகுதி மக்கள் மது போதையில் இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து ஒரு வீட்டினுள் அடைத்து வைத்தனர் . பின்பு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த நாகேந்திரன் மட்டும் ரகுவரனை , ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர் , அங்கே நாகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் காயம் அடைந்த ரகுவரனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .




இந்நிலையில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டியப்பன் தலைமையிலான போலீசார் கிரிவாசன்  , அன்பரசு , கேசவன் , ஹேமா பிரசாத் மற்றும் ஹரிஷ் ஆகிய 5  பேரையும் கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .


கொலை செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் நாகேந்திரனுக்கு திருமணம் நடைபெற்று , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .