வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்டம் தொழிலாளர் முதன்மை நீதிமன்றத்தில், இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் பொறுப்பு அதிகாரியும், மாவட்ட முதன்மை தொழிலாளர் நீதிபதியுமான உமா மகேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது மாவட்ட முதன்மை தொழிலாளர் நீதிபதி உமா மகேஸ்வரி  பேசுகையில், 


உச்ச நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு வழக்காடிகள் மூலம் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களை சேர்ந்த வழக்காடிகளுக்காக வரும் 29ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை வேலூரில் உள்ள சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சேர்ந்த வழக்காடிகள் நேரடியாக வருகை தந்து, சமரசம் செய்து வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.


Raayan Twitter Review: 50வது படத்தில் செஞ்சுரி அடித்தாரா தனுஷ்! ராயன் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!


சந்தேகங்களை 1500 என்ற இலவச எண்களை பயன்படுத்தி ஆலோசனை பெறலாம்


 நேரடியாக வர முடியாதவர்கள் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டு தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வழக்காடிகளுக்கு ஏற்கனவே நான்கு முறை முன் சமரச கூட்டம் நடைபெற்று உள்ளது. மேலும் இன்று  வெள்ளிக்கிழமை ஐந்தாவது முன் சமரச கூட்டமும் நடைபெறும். இக்கூட்டத்திலும் வழக்காடிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முன் சமரச கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகங்களை 1500 என்ற இலவச எண்களை பயன்படுத்தி ஆலோசனை பெறலாம்” என்றும் கூறினார். மேலும் இந்த சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்காடிகள் சமரசம் செய்து கொள்வதால் நேரம் மிச்சப்படுவதுடன் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வழிவகை செய்யும் என்றும் அவர் கூறினார். எனவே இதனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்காடிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். உடன் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். 


Walk in Interview: வேலை தேடுறீங்களா? சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது?