வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குழுக்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் தலைவர் சங்கர் IPS கலந்தாய்வு கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல IG கண்ணண், வேலூர் சரக டிஐஜி முனைவர்.முத்துசாமி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, திருவண்ணாமலை டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். 





மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் போதைப் பொருட்களை தடுப்பது குறித்து கலந்துரையாடினார். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பொருளை எப்படி ஒழிக்க வேண்டும் என்பது குறித்தும் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் இதில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது அதேபோல காவலன் செயலியை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 




இதற்கிடையில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் பேசுகையில், ”போதை பொருட்களை தொடமாட்டோம் என நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். கஞ்சா வேட்டை ஒன்று மூலம் 1000 பேரையும், கஞ்சா வேட்டை இரண்டு மூலம் 2000 பேரையும், கஞ்சா வேட்டை 3 மூலம் 2000 பேரையும் கைது செய்துள்ளோம், 4.0 விலும் ஏராளமானோரை கைது செய்து வருகிறோம். பள்ளி கல்லூரிகளில் போதை பொருளுக்கு எதிரான தடுப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். போதை பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்க்கு நீங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் தொடரும். "WAR AGAINST DRUG" என்ற ஸ்லோகத்தை முன்னிறுத்தி போதை பொருள் மீது நாம் போர் தொடுக்க வேண்டும் எனப் பேசினார்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.