இலங்கையின் ராஜபக்சே கதிதான், மோடிக்கும் ஏற்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் எழுச்சித் தமிழரின் ஆணைக்கிங்க வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேலூர் மண்டல செயலாளர் ஒருகிணைப்பில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்கள் வெற்றிகொண்டான் மற்றும் ஓம்பிரகாசம் என்கிற செஞ்சுடர் தலைமையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள CAA குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கட்சின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.



 

அப்போது பேசிய அவர், CAA குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செத்தாலும் விட மாட்டோம் எனவும் சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் மோடிக்கும் ஏற்படும் என பேசினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி‌ அரசு பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவருடைய நீலி கண்ணீரை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மண்டல துணை செயலாளர் கோவேந்தன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்தீபன்‌உள்ளிட்ட மாவட்ட,நகர, ஒன்றிய பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.