சென்னையில் வசித்து வரும் துரை தயாநிதி மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாநிதி அழகிரி:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி . இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து,சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தயாநிதி, சில நாட்களில் வீடு திரும்பினார்.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:
இந்நிலையில், துரை தயாநிதி மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனையில், மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Also Read: Mamata Banerjee: நெற்றியில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி! என்ன நடந்தது?