பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் தலமாகும் விலங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவியில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் உள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு வெளிமாநிலம் , வெளிநாட்டு, வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தபின்பு கிரிவலம் சுற்றி வருகின்றனர். அதிக அளவில் அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவதால் கோவிலில் உள்ள பிரசாத பைகளுக்கு , வெளியில் உள்ள தனியார் மொபைல் கடைகள், துணிக்கடைகள், நகைகடைகள் போன்றவர்கள் தங்களின் கடையின் விளம்பரங்களை விபூதி மற்றும் பிரசாதம் தரக்குடிய பொருட்களில் அச்சடித்து அதனை நன்கொடையாக கோவிலுக்கு அளிக்கின்றனர். அதனை கோவிலில் பணிபுரியும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் லஞ்சமாக பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையின் லோகோ அன்னை தெரசா புகைப்படம் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்களோடு கோவிலில் உள்ள விபூதி பாக்கெட்டுகளில் இருந்ததை கண்டு ஆன்மீக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அன்னை தெரசா பொறித்த புகைப்படம் கொண்ட விபூதி பாக்கெட்டுகளை எடுத்துகொண்டு அண்ணாமலலயார் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது இந்து அமைப்பினர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் விபூதி பிரசாதம் கொடுக்கப்படும் கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை பெயருடன் கூடிய பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படத்துடன் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கவர் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தான் வழங்கப்பட்டதா யார் மூலம் இந்த கவர் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் திருக்கோயிலில், முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் என நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவோ எதுவும் பெறாமல்,
இத்திருக்கோயிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் .K.சோமநாத குருக்கள் மற்றும் .A.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத கவரினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் இன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டாதால் விசாரணை செய்த வகையில், பிரசாத கவர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வழங்கிய தன்னிச்சையாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவருவதாலும், திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் ஆறு மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.