திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள காம்பட்டு அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் முனுசாமி வயது (50) இவர் அதே பகுதியில் கடந்த சில தினங்களாக நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் பலத்த இடியுடன் மின்னலுடன் கனமழை பெய்தது. அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்த முனுசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்த விஏஓ சந்தோஷ் அளித்த தகவலின் அடிப்படையில் தண்டராம்பட்டு தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், வி.ஏ.ஓ. சந்தோஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வாணாபுரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் சௌந்தரராஜன் சம்ப இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




மின்னல் தாக்கி உயிரிழப்பு:


உயிரிழந்த முனுசாமிக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கு வியாபாரம் செய்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.


இந்த நிலையில் சேர்ப்பாப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்டவாக்கிலப்பட்டு பகுதியைச் சேர்த்த வேலு மகன் தினேஷ் வயது (26) பட்டதாரி வாலிபர் இவர் தனது தந்தையுடன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது விவசாய நிலத்திற்கு மதியம் சென்ற தினேஷ் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை விவசாய நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தநிலையில் தினேஷ் கிடந்துள்ளார். அப்போது, அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சே. கூடலூர் அரசு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.




 


மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாணாபுரம் காவல்நிலைய துணை ஆய்வாளர் சௌந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பிரதத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர் மழையின் காரணமாக அடுத்தடுத்து மின்னல் தாக்கி நுங்கு வியாபாரி மற்றும் பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்