திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவருடைய அசைவ 7ஸ்டார் உணவகம் பல வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. மேலும் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் குழந்தை லோசினி என்பவர் அசைவ உணவு சாப்பிட்டதில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது மட்டுமின்றி ஆரணி நகர பகுதியை சேர்ந்த 14 பேரும் செங்கம் ஊராட்சிக்குபட்ட காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த 4சிறுவர்களும் அந்த அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர், அவர்களுக்கும் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களையும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா மற்றும் ஆரணி வட்டாச்சியர் சுபாஷ்சந்தர் துணை காவல்கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் விரைந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையொடுத்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா தலைமையில் ஆரணி நகர பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியார் அசைவ ஒட்டலை வருவாய் துறையினர் சென்று சீல் வைத்தனர்.
அதனையொடுத்து கடையில் இவர்கள் சாப்பிட்ட உணவினை கைப்ப ற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளன அதனையடுத்து உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவினை கைப்பற்றி கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் காதர்பாஷாவை என்பவரை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வந்த நிலையில் அவரை அவரது உறவினர் வீட்டில் உள்ளார் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சென்று கைது செய்தனர். அதன் பிறகு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உணவகத்தின் சமையல் மாஸ்டரையும் கைது செய்தனர் ஆரணியில் அசைவ ஒட்டலில் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு 10 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசுகையில்
ஆரணி 7 ஸ்டார் உணவகத்தில் செய்த உணவுகள் மற்றும் உணவிற்கு சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும் கைப்பற்றி சேலத்தில் உள்ள ஆய்வு கூட்டத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்றும் அதன்பிறகு உணவகத்தின் உரிமம் ரத்து செய்துள்ளோம் என்றும் அதனைத்தொடர்ந்து ஆரணி பகுதியில் உள்ள அனைத்து சைவ மற்றும் அசைவ உணவங்களில் ஆய்வு நடத்தி வருகின்றோம், ஆய்வு செய்யும் உணவகங்களில் வேறு உணவில் குளறுபடி எதாவது நடந்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டும் என்று தெரிவித்தார்.