முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம்; கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சித்தூர், திருவண்ணாமலை சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சித்தூர், திருவண்ணாமலை சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக கனரக வாகன ஓட்டிகளுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வேலூர்‌ வருகையெட்டி வேலூர்‌ மாவட்டத்தின்‌ வழியாக செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ கீழ்காணும்‌ வழியாக திருப்பிவிடப்பட உள்ளது. இந்த உத்தரவு நாளை (17.09.2023) காலை 08.00 மணி முதல்‌ நாளை இரவு 10.00 மணி வரை செயல்பாட்டில்‌ இருக்கும்‌

1. சென்னை முதல்‌ பெங்களூரு வரை / பெங்களூரு முதல்‌ சென்னை வரை:- சென்னை - தென்கடம்பந்தாங்கல்‌ - முத்துக்கடை- பெல்‌ - திருவலம்‌ - சேர்காடு - ஆந்திரா நரஹரிபேட்டை _ கிருஷ்டியான்பேட்டை - காட்பாடி குடியாத்தம்‌ கூட்ரோடு - கீ. வ.குப்பம்‌ - குடியாத்தம்‌ நான்கு முனை சந்திப்பு - நேதாஜி சவுக்‌ - உள்ளி கூட்ரோடு - மாதனூர்‌ - பெங்களூரு 

2.. பலமநேர்‌ முதல்‌ சென்னை வரை / சென்னை முதல்‌ பலநேர்‌ வரை:- பலமநேர்‌ - சைனகுண்டா சோதனை சாவடி - குடியாத்தம்‌ நான்கு முனை சந்திப்பு - கீ.வ.குப்பம்‌ - காட்பாடி குடியாத்தம்‌ கூட்ரோடு - கிருஷ்டியான்‌ பேட்டை சோதனை சாவடி - ஆந்திரா நரஹரிபேட்டை - சேர்காடு - திருவலம்‌ - பெல்‌ - முத்துக்கடை - தென்கடம்பந்தாங்கல்‌ - சென்னை 3. திருவண்ணாமலை முதல்‌ பெங்களூரு வரை / பெங்களூரு முதல்‌ திருவண்ணாமலை வரை:- திருவண்ணாமலை - சாத்துமதுரை - ஸ்ரீபுரம்‌ கூட்ரோடு - மூலைகேட்‌ - அணைக்கட்டு - அகரம்‌ - மாதனூர்‌ - பெங்களூர்‌.,4 திருவண்ணாமலை முதல்‌ சித்தூர்‌ வரை / சித்தூர்‌ முதல்‌ திருவண்ணாமலை வரை:- திருவண்ணாமலை - ஆரணி - திமிரி - ஆற்காடு - முத்துக்கடை - திருவலம்‌ - சேர்காடு - ஆந்திரா நரஹரிபேட்டை - சித்தூர்‌ மேற்கண்ட வழியாக பயணிக்கும்‌ அனைத்து கனரக வாகனங்களை இயக்கும்‌ ஓட்ருநர்கள்‌ வாகன நெரிசல்களை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட காவல்துறையின்‌ சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


மேலும், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று 16.09.2023-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பணியிற்காக தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர், 03 காவல்துறை துணை தலைவர்கள், 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுமார் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஓட்டல் அணுக்குளாஸ், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மெனவூர் இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெரும் பள்ளிகொண்டா கந்தநேரி ஆகிய பகுதிகள் அனைத்தையும் (No Flying Zone) "ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்" பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் சட்டப்படி நடவடிக்கை என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola