திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 4500 மகளிர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டுள்ளது. 5 முறை தமிழ்நாடு முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிர்க்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.


 




 


பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாளான இன்று அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தற்கு மாவட்ட மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் மகளிர்களுக்கு எண்ணற்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொரோனா காலத்தில் நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர்களுக்கு கட்டணமில்லா பயண பேருந்து. அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுப்பெண் திட்டம் போன்ற என்னற்ற திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. நீதிக்கட்சி தலைமையிலான ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் தேர்தலில் வாக்குரிமை கொடுக்கப்பட்டது. அதன் பின்பு திராவிட கட்சி பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் 1929-ல் செங்கல்பட்டில் மாநாடு நடத்தி ஆண், பெண் இருபாலருக்கும் சொத்தில் சமபங்கு உரிமை அளிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சமப்பங்கு உரிமை உண்டு என ஆணை பிறப்பித்தார்.


 




 


மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர். அதேபோல் 1973-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தான் காவல் துறையில் பெண்களும் பணியில் சேரலாம் என முதன்முதலில் ஆணையை கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதிக்கிட்டால் தான் பெண்கள் அதிகளவில் பதவியில் உள்ளனர். அதற்கு காரணம் டாக்டர் கலைஞர் தான். எனவே இந்த ஆட்சி ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக திட்டங்களை செயல்பத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஆறுகளுக்கு கூட பெண்கள் பெயர்களில் தான் பெயர் உள்ளது. தாய்யுள்ளம் கொண்ட முதலமைச்சர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு என்ற மக்கதான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தகுதியுள்ள மகளிர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும். இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர்களுக்கு கலைஞர் மகளின் உரிமைத்திட்டத்தின் மூலம் மாதம்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் திராட மாடல் அரசானது மக்கள் நலன் கருதியே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இந்த அரசு மக்களின் வளர்ச்சிகாவே செயல்படும் அரசு. இவ்வாறு அமைச்சர் பேசினார்.