1) முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 மணிநேரத்திற்குப் பிறகு முடிந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவுபெற்றுள்ளது.  முக்கிய  ஆவணங்களைக் கைப்பற்றி  லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை எடுத்துச் சென்றுள்ளனர் . 


2) 9 சொகுசு கார்கள்... மணல் குவியல்... டாலர்கள்... கே.சி.வீரமணி ரெய்டில் சிக்கியதை பட்டியலிட்ட போலீஸ் . 4.987 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


3) செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி அனு தேர்வு முடிவு அச்சம் காரணமாக தீக்குளித்து தற்கொலை முயற்சி.இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன.


4) கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி . நவம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.


5) தமிழகத்தில் முதன்முறையாக 1100 ஆண்டுகள் முற்பட்ட அரிய சிவன் சிலை வாலாஜாபாத்தில் கண்டுபிடிப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளது பழையசீவரம் கிராமம் இக்கிராமத்தில் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என்னும் சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


6) அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் -அனுராதா ஆகியோரின் மகள் ஜெயஹரணி திருமணம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.


7) வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலையில் மேலும் 4 குற்றவாளிகள் கைது .’’கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்வதற்கான அரிவாள்களை வாங்கி வந்து சாணை பிடித்து தயாராக வைத்திருக்க உதவியதும் விசாரணையில் தெரியவந்தது’’


8) கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் இன்றி நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி . ’’நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்’’


9) சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை திசை திருப்புவே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை - பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற  உறுப்பினர் கோவிந்தசாமி. கே.சி வீரமணிக்குச் சொந்தமான இடையம்பட்டி , காந்தி சாலையிலுள்ள அவரது வீட்டில் நடந்துவரும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து நேரில் விசாரிக்க வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோவிந்தசாமி , லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார் .


10) காதலி பேச மறுத்ததால் காதலன் தற்கொலை’- இறுதி ஊர்வலத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!புதுச்சேரி சாரம் சத்தியா நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசனின் மகன் யுவராஜ் (29). 12ஆம் வகுப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் முதலியார்பேட்டை ஐயப்பசாமி நகர் பகுதியில் வசிக்கும் உமாதேவி என்பவரது மகளான லிங்கேஸ்வரியை கடந்த 8 மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.


11) கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையில் அரசின் உத்தரவை மீறி மீன்பிடித் திருவிழா: 17 பேர் மீது வழக்கு பதிவு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகத்துருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், மீன்பிடி திருவிழா நடத்த மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வமிகுதியின் காரணமாக சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன் பிடி வலை, பாத்திரங்கள், மிதவை ஆகியவற்றுடன் மணிமுத்தா அணைப் பகுதிக்கு திரண்டு வந்து மீன்களை போட்டி, போட்டு மீன்களை பிடித்தனர்.