திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே திருவண்ணாமலை, கலசப்பாக்கம், மற்றும் ஜவ்வாது மலை பகுதிகளில் அதிக அளவு கனமழை பெய்து வந்தது. குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் கலசப்பாக்கம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகவே அதிக அளவு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கலசப்பாக்கம் மற்றும் ஜவ்வாது மலை பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம்பட்டு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அங்கிருந்த பொய்யாரு ஓடையில் அதிக அளவு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஓடைக்கு அந்த பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.


 






 


இந்த கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் பொய்யாரு ஓடையில் அமைத்துள்ள தரைப்பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பொய்யாறு ஓடையை கடக்க முயன்ற ஒரு முதியவரின் இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வந்த நிலையில் மற்றொரு இளைஞரின் இரு சக்கர வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை மீட்க மூன்று இளைஞர்கள் முயன்ற போதும் இரு சக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


 


 






 




ஜவ்வாது மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பீமன் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு காட்டாற்று வெள்ளம் வரும் நிலையில்  நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீரென பெய்த கன மழையால் மலையில் இருந்து பெரிய காட்டாறு வெள்ளம் பெருக்கானது ஏற்பட்டது. அந்த காட்டாறு புதிய வழி தடத்தை உருவாக்கிக்கொண்டு வழியெங்கும் உள்ள மரங்களை தார்சாலை பிடுங்கி எடுத்துக்கொண்டு செய்யாறு ஆற்றில் தண்ணீர் கலந்து சென்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண