தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களுக்கு மட்டும் தான் நல்ல மழை கிடைப்பது வழக்கம். ஆனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை தான் பெரிய அளவில் கை கொடுக்கும் என்பார்கள். ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு பிறகு இந்த நிலை அப்படியே மாறியது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலங்களில் சரியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 30 சதவீத மழை பொழிந்துள்ளது, தென்மேற்கு பருவமழை காலங்களில் 70 சதவீதம் மழையும் பெய்து இருக்கிறது.  இயற்கையின் இந்த திடீர் மாறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவ மழை பெய்கிறது.


பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்


 




அந்த வகையில் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை உள்ளது. ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கோடை விழா நடத்தப்படும். இந்த பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி போன்றவை உள்ளன. கடந்த சில தினங்களாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதன்படி கடந்த சில தினங்களாக ஜமுனாமரத்தூர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


 





இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களில் ஜமுனாமரத்தூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். இந்த நிலையில் பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் அதிகளவில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் வனத்துறையினர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் தெரிவித்துள்ளார்.


மேலும் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் அங்குள்ள காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குப்பனத்தம், செண்பகத் தோப்பு அணை மற்றும் மிருகண்டா அணைகளுக்கு தண்ணீர் வரத்து கொண்டிருக்கிறது. இதே போல் செய்யாற்றிலும் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் ஏற்படும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண