திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட சித்தனகால் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் (70), ரேவதி (65) தம்பதிக்கு ஆனந்தி (35), சத்தியா (33), ராஜகுமாரி ( 30) என்ற 3 மகள்கள் மற்றும் உதய கதிரவன் (45) மற்றும் சூரிய பிரகாஷ் ( 32) என்ற 2 மகன்களும்  உள்ளனர். இவர்கள் அனைவருக்கும்  திருமணமாகி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில்,  தந்தை கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் இளைய மகன் சூரிய பிரகாஷ் வீட்டில் வசித்து வந்துள்ளனர். கிருஷ்ணனுக்கு சொந்தமாக 3 ஏக்கர் 25 சென்ட் நிலம் வைத்து கொண்டு விவசாயம் செய்து பிழப்பை நடத்தி வந்துள்ளனர். அதனை தொடர்ந்து கிருஷ்ணனுக்கு சொந்தமான 3 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை மிரட்டியும், ஏமாற்றியும் தனது பெயருக்கு பட்டா மாற்றி கொண்டுள்ளார் இளைய மகன் சூரியபிரகாஷ்,




மேலும் வயதான தம்பதிக்கு உணவு அளிக்காமல் பல விதத்தில் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் கிருஷ்ணனின் மனைவி ரேவதி நெஞ்சு வலி வந்து இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணனுக்கு உணவு அளிக்காமலும், வீட்டில் வைத்து பூட்டி கிருஷ்ணனை இளைய மகன் சூரியபிரகாஷ் கொடுமைப்படுத்தியும் அடித்தும் வந்துள்ளார். தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தன்னுடைய நிலத்தினை மீட்டு மீண்டும் தனக்கு தரக்கோரியும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணன் மற்றும் இவர்களது மூன்று மகள்களும் கதறி கண்ணீர்விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். இவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியை அளித்தது அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.




 


தான செட்டில்மெண்ட் ரத்து செய்ய முடியுமா? இது குறித்து வழக்கறிஞர் சங்கரிடம் கேட்ட போது


இதேபோன்று கடந்த மாதங்கள் முன்பாக திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழகுப்பம் பகுதியை சேர்ந்த பெற்றோரின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு, சோறுபோடாமல் தவிக்கவிட்ட மகன்களிடம்  இருந்து கடந்த ஒரு மாதங்களுக்கு   முன்பாக தற்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சொத்துக்கள் மீட்டு கொடுத்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் டில்மெண்ட் பத்திரப் பதிவின் கீழ், தான செட்டில் பண்ட் ரத்து செய்து, மீண்டும் பெற்றோரிடம் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தான செட்டில்மெண்ட் எழுதும்பொழுது நிபந்தனையையும் பதிவு செய்யும் வசதியை பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்களின்  பெருந்தன்மை காரணமாக, நிபந்தனையை பதிவின்போது குறிப்பிடுவதில்லை எனக் கூறினார்.