திருவண்ணாமலை தீபம் நகரை சேர்ந்தவர் குமணன் வயது (67)  இவர் போளூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது குமணனுக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் தனது ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் எடுத்து தரகோரியுள்ளார். அந்த அடையாளம் தெரியாத நபர்  ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது பணத்தை எடுத்து கொடுக்காமல் ஏடிஎமில் பணம் இல்லை என்று கூறி அவரிடம் போலி ஏட்டிம் கொடுத்து அணுப்பியுள்ளார்.
 
பின்னர் அடையாளம் தெரியாத நபர் அவரது ATM இருந்து ரூ.30,000 எடுத்து சென்றுள்ளார்.
 இதேபோல் குபேரன் நகர் 4 வது தெருவை சேர்ந்தவர் பழனி வயது (77) இவரும் இந்தியன் வங்கியில் பணம் எடுக்க சென்றுள்ளார் அதே அடையாளம் தெரியாத நபர் அவரது ஏடிஎம் இருந்து ரூ. 40,000 பணம் எடுத்துள்ளார். இதுகுறித்து இரண்டு நபர்களும் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  


 




 


அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதே அடையாளம் தெரியாத நபர் நேற்று மாலையில் , மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு வயது (40)என்பவரின் மனைவி கோகிலதீபா, வயது ( 34) என்பவர் தனது தந்தையின் ATM கார்டை எடுத்துக்கொண்டு  பணம் எடுப்பதற்காக, செங்கத்தில் உள்ள SBI ATM- மையத்திற்கு  சென்றுள்ளார். அந்த ATM-ல் பணம் இல்லாததால், அருகிலிருந்த India No1 ATM-ல் பணம் எடுக்க சென்றுள்ளார்.


 


அப்போது அடையாளம் தெரியாத நபரிடம்  எனக்கு பணம் எடுக்கத் தெரியவில்லை, எனக்கு கொஞ்சம் பணம் எடுத்து தாருங்கள் எனக்கூறியுள்ளார். அதற்கு அடையாளம் தெரியாத நபர்  உதவுவதாக கூறி ATM கார்டு மற்றும் ரகசிய எண்ணை வாங்கிக் கொண்டு ATM-ல் பணம் எடுக்க முயன்றதாகவும், பின்னர் அந்த நபர் ATM-ல் பணம் இல்லை எனக் கூறி நீங்கள் வேறு ATM மையத்திற்கு சென்று எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார் அதனை நம்பி கோகில தீபா சென்றுள்ளார். 


 




 



அதனைத்தொடர்ந்து மற்றொரு ஏடிஎம் சென்று பணத்தை எடுப்பதற்கு கார்டை பயன்படுத்திய போது அவரது தந்தையின் ஏடிஎம் கார்டு மூலம் தலா 9500/ இரண்டு முறையும் மற்றும் ஒரு முறை 1000/- ரூபாய் என மொத்தம் மூன்று முறையாக 20,000/- ரூபாய் எனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக, எனது தந்தையின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது.


இதை அடுத்து அந்த பெண் வங்கியில் சென்று விசாரித்த போது அந்த நபர் என்னிடம் எனது தந்தையின் ATM கார்டுக்கு பதிலாக வேறு போலி ATM கார்டை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.  அதன் பிறகு செங்கம் காவல்நிலையம் புகார் அளித்தார்  புகாரின் அடிப்படையில் செங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடிவந்தனர். 


 




அப்போது காவல்துறையினருக்கு வந்த  ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த மர்ம நபர் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள SBI ATM அருகே இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த மர்ம நபரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் நவீன்குமார், வயது (27) என்பதும், அவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் இதேபோன்று ATM-ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வதுபோல் நுதன முறையில் ஏமாற்றியதற்காக 2019-ம் ஆண்டு மட்டும் இவர் மீது 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைத்துள்ளனர். 



அதன் பிறகு  ஜாமினில் வெளியே வந்ததும், பின்னர்  திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும். இவர் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது உடனடியாக நூதன திருட்டில் ஈடுபட்ட நவின்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 4,00,100/- ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகத்தை பறிமுதல் செய்து சிறையில்  அடைத்தனர்.