சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 1000 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 116.80 அடி எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

Continues below advertisement

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 116.80 அடி எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.

Continues below advertisement

 


 

இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அனைக்கு வினாடிகு 1000 ஆயிரம் கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் தொடர்ந்து அனைக்கு நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது தண்ணீர் அணையில் 116.80 அடியை எட்டியது. அதாவது அணையில் 6875 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.

 


 

இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வந்தனர். லேசான நீர்வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மீண்டும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1000ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சாத்தனூர் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணைக்கு வரும் 1000 ஆயிரம் கன அடி நீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் இரு கறைகளும் அனைத்தப்படி ஆர்ப்பரித்து செல்கிறது, இதில் தரைப்பாலம் அனைத்தும் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் காவல்துறையினர் தரைப்பாலம் முன்பு பேரிகாடுகள் அமைத்து பொதுமக்கள் செல்லவேண்டாம் என கூறி வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அதற்கு ஏற்றவாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AIADMK Meeting LIVE: பாஜவுடனான கூட்டணி வேண்டாம் - மாவட்டச் செயலார்கள் வலியுறுத்தல்..!

Continues below advertisement