• நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம்! முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக!


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை  திமுக தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பேசியதாவது:  கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், “ஒரு மாநிலத்தில் நடப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. மேலும் படிக்க 



  • TN Rain Alert: 3 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மிக கனமழை.. 10 மாவட்டங்களில் இருக்கு கனமழை.. இன்றைய வானிலை நிலவரம்..!


வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும் 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 



  • குறையுமா மின்கட்டணம்; போராட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்: அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!


தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதில், தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் படிக்க



  • Edappadi Palanisamy Tender Case: எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு.. அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!


எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை வருகின்ற அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியினர் வழக்கை எதிர்கொள்வதில்லை என தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதி ஒத்திவைத்தனர். கடந்த 2016- 21ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.4,800 கோடிக்கு டெண்டர்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக எம்பி ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ்க்கு எதிராக மனு தாக்கல் செய்தார். மேலும் படிக்க 



  • Aiadmk - Bjp Alliance: பாஜக உடன் கூட்டணி குறித்த கேள்வி; நைசாக நழுவிச் சென்ற ஜெயக்குமார்


தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செயல்பட்ட செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக  அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன். மேலும் படிக்க