திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று காலை 6:55 மணியளவில் திருவண்ணாமலை அடுத்த நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் வயது 45 என்பவர் பயணித்தார். இந்த அரசு பேருந்தில் செய்யாறு பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்பட்ட சில மணி துளிகளில் பாண்டியன் நடத்துனரிடம் ரூபாய் 200 கொடுத்து விட்டு திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு வாங்கியதாகவும், பயணச்சீட்டு தொகை 175 போக 5 ரூபாயை நடத்துனர் குமார், பாண்டியனிடம் பெற்றுக்கொண்டு 30 ரூபாயாக பாண்டியனிடம் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்தில் பயணித்த பாண்டியன் பேருந்து செங்கல்பட்டை தாண்டி வந்து கொண்டிருக்கும் பொழுது தான் 500 ரூபாய் கொடுத்ததாகவும் மீதி தொகையை கொடுக்க வேண்டும் என பேருந்து நடத்துனர் குமாரிடம் தகராறு செய்து வந்ததாகவும்,


 




அதனை தொடர்ந்து பாண்டியனின் நண்பர் திருவண்ணாமலையில் (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் STF) காவலராக பணிபுரிந்து வரும் திருமாலிடம் தொலைபேசியின் மூலம்  தொடர்பு கொண்டு பேருந்தில் நடந்த தகராறு பற்றி விளக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வந்தவுடன் காவலர் உதவியோடு பாண்டியன் நடத்துனரை தாக்கியுள்ளனர். நடத்துனரின் பணப்பையை பிடுங்கியதுடன் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து பாண்டியன் தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனை அறிந்த பேருந்து நிலையத்தில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவலரையும் பாண்டியனையும் பேருந்து நிலையத்தில் நய்ய புடைத்ததாக கூறப்படுகிறது. காவலரையும் பாண்டியனையும் பேருந்து நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்தில் ஓட்டுநர்கள் ஒப்படைத்தனர்.


 




 


இதனிடையே அரசு பேருந்து நடத்துனரை தாக்கி விட்டு தப்ப முயன்ற காவலர் மற்றும் பேருந்தில் பயணித்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகளை இயக்காமல் புற காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல் துறையினர் செய்வதறியாமல் இருந்த நிலையில் நடத்துனரை தாக்கிய பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட காவலர் திருமால் ஆகிய இருவரையும் கிழக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.