திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் இங்கு அதிக அளவில் உள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். திருவண்ணாமலை விவசாயிகளுக்கு  வடகிழக்கு பருவ மழையை மட்டுமே கை கொடுக்கும், வடகிழக்கு பருவ மழை சமயத்தில் உருவாகும் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நல்ல மழை கிடைக்கும். இதனால் ஏரிகள் , குளங்கள் என அணைத்து நீர் நிலைகளும் மழை நீர் நிரம்பும், இதனால் மே மாதத்திலும் விவசத்திற்கு நீர் கிடைக்கும்.  இந்த ஆண்டிற்கான பருவ மழை தாமதமாக தொடங்கியதால் புயல் உருவாகி மழை கிடைக்கும் என விவசாயிகள் எதிர் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் புயல் உருவாகி  பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு என கடந்த மூன்று நாட்களாக  மழை, மிதமான சாரல் மழையும், செய்யார் , வந்தவாசி  பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. 


 




 


ஆனால் செய்யாற்றில் 30 மி மீ மழை வெம்பாக்கத்தில் 54 மி மீ , வந்தவசியல் 23 மி மீ அரணியில் 11 மி மீ என மழை பெய்து ஏமாற்றத்தை அளித்தது. கடந்த ஆண்டு இதே பருவ மழையில் புயல் உருவாகி தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்ததால் 75% சதவீதம் ஏரி, குளம், கிணறுகள் மழை பெய்து நிரம்பின. இதனால் விவசாயத்திற்கும் நீர் பற்றாக்குறை ஏற்படவில்லை,  வந்தவாசி, செய்யார், ஆரணி, வெம்ப்பாக்கம் பகுதிகளில் ஏற்கனவே 75% சதவீதம் நிரம்பிய ஏரிகளில் தற்போது ஏற்பட்ட புயலால் 29 ஏரிகள் மட்டுமே முழுவதும் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 68.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர்-00.00 மி.மீ, தண்டராம்பட்டு- 00.00 மி.மீ, போளூர்- 00.00 மி.மீ, செய்யாறு- 30.00மி.மீ, வெம்பாக்கம்- 68.80 மி.மீ, ஜமுனாமரத்தூர்- 0.00 மி.மீ, வந்தவாசி- 17.0 மி.மீ, சேத்துப்பட்டு- 4.20 மி.மீ, ஆரணி-11.20 மி.மீ, கலசபாக்கம்-0.00 மி.மீ, செங்கம்- 0.00 மி.மீ, திருவண்ணாமலை-0.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 


 





திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 600 ஏரிகள் உள்ளன. இதில் நேற்றைய நிலவரப்படி செய்யாறு 38 ஏரிகள் , ஆரணி 23 ஏரிகள், செங்கம் 19 ஏரிகள், கீழ்பென்னாத்தூர் 17 ஏரிகள் , வந்தவாசி 13 ஏரிகள் , போளூர் 13 ஏரிகள், தண்டராம்பட்டு 3 ஏரிகள் , திருவண்ணாமலை 10 ஏரிகள் என மொத்தம் 136 ஏரிகள் மட்டுமே முழுவதும் நிரம்பி உள்ளன. இது தவிர 75-ல் இருந்து 80 சதவீதம் வரை 55ஏரிகளும், 50-ல் இருந்து 75 சதவீதம் வரை 94 ஏரிகளும், 25 முதல் 50 சதவீதம் வரை 229 ஏரிகளும் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு கீழ் 86  ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் இந்த ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு போதுமானது அல்ல  நேற்று  பெய்த மழையில் அதிகபட்சமாக வெம்பாக்கம்  பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. வெம்பாக்கம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.