திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தியின் மகன் விநாயகம் வயது (35) என்பவர் அசைவ உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். அவர் அசைவ உணவான காடை வறுவல் ஒன்றை ஆர்டர் கொடுத்து அதனை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சர்வர் கொண்டு வந்த காடை வறுவலை சாப்பிட எடுத்தபோது உள்பகுதியில் புழுக்கள் நெளிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுசம்பந்தமாக உடனடியாக விநாயகம் ஊழியர்களிடமும், உரிமையாளரிடமும் கூறியுள்ளார். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருடன் வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஓட்டலில் சாப்பிட்ட விநாயகம், காடை வறுவலில் புழுக்கள் நெளிந்ததை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அதற்குண்டான பில்லையும் செலுத்தி விட்டு ஓட்டலில் இருந்து சென்றுள்ளார். பின்னர் விநாயகம் காடையில் புழுக்கள் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து, ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அசைவு ஓட்டலுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அவர் சாப்பிட்டு வைக்கப்பட்டிருந்த காடை வறுவலையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரணி நகரில் தொடர்ந்து அசைவ ஓட்டல்களில் இது போன்ற சுகாதார கேடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ஓட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 




 


இதேபோல் சில மாதத்திற்கு முன்பு ஆரணியில் உள்ள தனியார் 5 ஸ்டார் அசைவ உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல் கடந்த மே மாதம் இந்த அசைவ உணவகத்தில் பள்ளி மாணவர் ஒருவர் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவை சாப்பிட்டு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மாணவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண