ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கணவர் வேறு பெண்ணிடம் தொடர்ப்பு வைத்திருந்ததாக சந்தேகித்த 29 வயது பெண் ஒருவர், அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது அந்தரங்க உறுப்புகளில் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 32 வயதான தங்கராஜ் என்பவர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பணி முடிந்து தனது வீட்டுக்கு சென்ற தங்கராஜ், வேலை பார்த்து வந்த அலுப்பில் தூங்கியுள்ளார். 


நீண்ட நாட்களாக தனது கணவர் மீது சந்தேகம் கொண்ட பிரியா, சம்பவத்தன்று தனது கணவர் தூங்கி கொண்டிருந்தபோது அவரது அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார். இதனால் அவரது அந்தரங்க பகுதிகளில் 50% தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தொடந்து, காவேரிப்பாக்கம் போலீசார் அவரது மனைவி பிரியா (29) என்பவரை கைது செய்து, பிரிவு 294 (பி) (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்), 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506 (கிரிமினல் மிரட்டல் தண்டனை) மற்றும் (அச்சுறுத்தல் மரணத்தை அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துவதாக இருந்தால்) 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


முதற்கட்ட விசாரணையின்படி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது நடத்தையில் அந்த பெண் சந்தேகிக்கத் தொடங்கிய பிறகு அவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை தங்கராஜ் படுக்கைக்குச் சென்றார்.


ஆத்திரத்தில், ப்ரியா, குளியலறை கீசரில் இருந்து வெந்நீரை ஒரு வாளியில் சேகரித்து, தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அந்தரங்க உறுப்புகளில் ஊற்றியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த தங்கராஜ் உதவிக்காக அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண