திருப்பத்தூரில் ஏற்கனவே இருந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் சார்பு நீதிமன்றம், சிறப்பு சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 உள்ளிட்ட ஒன்பது நீதிமன்றங்களை உள்ளடக்கி திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இயங்கி வந்தது.
நீண்ட நாட்களாகவே திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஏற்கனவே இருக்கின்ற ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று முதல் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இணைக்கப்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக திருமதி மீனா குமாரி அவர்களும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக திரு ஓம் பிரகாஷ் அவர்களும் நியமிக்கப்பட்டு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மொத்தம் 11 நீதிமன்றங்கள் இயங்கும் விதமாக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.