திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் மாமண்டூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த தனது சித்தப்பா, சித்தி, ஆகியோரை அழைத்து கொண்டு திருவண்ணாமலை மாமண்டூர்  பகுதியில் நடைபெறும் உறவினர்கள்  திருமண விழாவிற்கு காரில் சென்றுள்ளார்.



அப்போது காஞ்சிபுரம் இருந்து  வந்தவாசி செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்த பொழுது திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதியில் எதிரே வந்த தனியார் தொழிற்சாலை வேன் சென்று கொண்டு இருந்தது அப்போது மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக சதீஷ் ஓட்டிச் வந்த கார் மீது அதிபயங்கரமாக  மோதியது. வேன் மோதியதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதீஷின் மகன் விஸ்வா (8), சித்தப்பா குழந்தைவேலு (60), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சதீஷ் குமாரின் மனைவி சுகன்யா (30), இரண்டு குழந்தைகள் நிலா (8), கமலா (5) மற்றும் அவருடைய சித்தி புஷ்பா (50) ஆகிய நான்கு நபர்களும் படுகாயம் அடைந்தனர்.


கோவை அருகே நீரில் மூழ்கிய பாலம் - துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இலவச படகு போக்குவரத்து துவக்கம்



கும்பகோணத்தில் முதியவர் வீட்டில் 36 சவரன் நகை திருட்டு - வாடகைக்கு குடியிருந்த பெண் உட்பட 2 பேர் கைது


கார் விபத்துக்குள்ளானது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 நபர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தூசி காவல்துரையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக திருமணத்திற்கு சென்றவர்கள் கார் மீது, வேன் மோதிய விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்து, 4 நபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் வையாவூர் பகுதியில் உள்ள  பொதுமக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


திருவாரூரில் 7280 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின - மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேட்டி