தமிழகத்தில் கோவில் திருவிழா காலங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு புராண நாடகங்கள் தெருக்கூத்து பொம்மலாட்டம் இசைக்கச்சேரிகள் கரக ஆட்டங்கள் வேடிக்கை பரிகாச நடனங்கள் நடத்தப்படும்  கடந்த 30 வருட காலங்கலில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.  தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் நடனம் ஆடுவதைப்போல் தங்களது ஊரிலும் அதுபோன்று குத்துப்பாட்டுக்கு நடிகைகளை ஆட வைத்து பார்க்க தொடங்கினர். இதில் சமீப காலங்களில் ஆபாசமான அசைவுகளைக் கொண்ட ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடைபெறும் இவ்வாறான கூத்து அரங்கேறி வருகின்றது. இதுபோன்ற காணொளிகள்  வலைய தளங்களில் பிரபலமாகி வருகின்றது. 


இந்நிலையில் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடைசெய்யகோரி மதுரை நாடக கலைஞர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த வழக்கில் உள்துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய நல்வாழ்வுதுறை  செயலாளர் ஆகியோர் தற்போதைய நிலையை குறித்து உத்தரவு விட்டு அதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுகின்றனர் இதனால் பாலியல் வன்கொடுமை நடைபெறவும் மற்றும் பொதுமக்களிடையே சீர்கேடு நடைபெறும் என்று மதுரை கிளை ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் தடைவித்துள்ளது.



செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் கடந்த 14 ஆம் தேதி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு அரைகுறை உடை அணிந்து பள்ளி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் பெண்கள் ஆபாசமான முறையில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா பரவலை மறந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதில் ஏராளமான பள்ளி சிறுவர்கள் தங்களது செல்போனில் ஒளிப்பதிவு செய்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 



தற்போது வரை பல்வேறு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில் கோவில் திருவிழா எனும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கலந்து கொண்ட சம்பவம் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க காரணமாக இருக்கும் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபோல் ஆபாச நடனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி நடத்த காவல்துறையினர் எப்படி அனுமதித்தார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 


ELIMINATE -ஆன பார்வதி! END- இல் அர்ஜூன் வைச்ச TWIST | Survivor Zee Tamil Day 6 Review | VJ Parvathy