1) வீரமணியால் நேரடியாகவும் மறைமுகமாகவும்  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது அதிமுக கட்சியை சார்ந்த சிலருமே , லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு அவர் தொடர்பான ஊழல் புகார்களை அனுப்பி வைக்கவும் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீடு உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து , அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் அவர் மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .


2) காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?


காஞ்சிபுதில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடம் ஆன்மீக மடமாக மட்டும் இல்லாமல், ஒரு படி மேலே சென்று அரசியல் செல்வாக்குமிக்க இடமாகவும் விளங்கி வருகிறது.  ’’1974, 1980ஆம் ஆண்டுகளில் சங்கரமடம் அருகே  பெரியார் சிலை வைப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான அனுமதியை தமிழக அரசு தரவில்லை. இதனையடுத்து காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த  நீதியரசர் வீ.இராமசாமி அரசுக்கு மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார் (7.9.1979). இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே சிலை வைக்கப்பட்டது.


3)உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து 20 மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் பள்ளியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.. இதில் 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


4) போலீஸ் வேன்- கார் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி: 10 நபர்கள் படுகாயம்! திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் போலீஸ் வேன் -- கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் வேன் கவிழ்ந்தது.


5) திருவண்ணாமலையில் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது கொரோனா தொற்று இன்று 22 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழப்பு இல்லை. விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌  இன்று 21 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


6) உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல் . வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கையுறை, முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல் .


7) அரக்கோணத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 4 லட்சம் கொள்ளை . அரக்கோணம் அருகே காவலாளி மற்றும் சிசிடிவி படக்கருவி இல்லாத தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் சாவகாசமாக  கொள்ளையடித்த கொள்ளை கும்பலை  காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்துத் தீவிரமாக தேடி வருகின்றனர் .


8) உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள விழுப்புரத்தில் 1537 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் . விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான நேற்று வரை 1,774 போ் வேட்புமனுக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


9) கே சி வீரமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் பொது செய்தியாளரை தாக்கிய முன்னாள் எம்எல்ஏ கார் டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் தலைமறைவான முன்னாள் வாணியம்பாடி  எம்எல்ஏ சம்பத் குமார் உட்பட  3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.