திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (25). 2020-ம் ஆண்டு இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குக்களுக்கான சிறப்பு நீதிமன்றதில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மீண்டும் இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


 




மற்றொரு வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை 


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இசுக்கை காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் வயது (30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். சாமுவேலுக்கு திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.  இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி சாமுவேல் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


 




இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்த சாமுவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண