அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் தக்காளி விலை உயர்வை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, தூசி மோகன் தலைமையில் 500 மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் நடுத்தர மக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய அத்தியாவசி பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத இந்த அரசு பதவி விலக வேண்டும். ஆளும் கட்சியின் அமைச்சர் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற பத்திற்கு மேற்பட்ட அமைச்சர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இன்று தமிழகத்தில் நடைபெறுகிற திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யா தவறுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடமும், பாரதபிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷா விடவும் எடுத்து கூறியதன் அடிப்படையில் இன்று தவறுகள் செய்த திமுக அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 


 




அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது ஒரு பொய்யான வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார்கள். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் எடுத்துச்சென்று வாதாடினார்கள், உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திலே இந்த வழக்கினை விசாரிக்க கோரி உத்தரவிட்டது. அதன் பிறகு நெடுஞ்சாலைத் துறையில் எந்தவித தவறும் செய்யாத எடப்பாடி பழனிசாமி மீது திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலால் ஆர் எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் பொய்யான வழக்கை தொடுத்தார். அந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற,ம் எடப்பாடி பழனிசாமி எந்தவித தவறுகளும் செய்யவில்லை என்று அந்த வழக்கினை தள்ளுபடி செய்தது. இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் இருக்க கூடிய நிலைமை. தமிழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாக துறையும், காவல்துறையும் திருவண்ணாமலையில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற காவல் துறையினர் தயவு செய்து கவனத்தில் வைத்து பணியாற்ற வேண்டும். இன்னும் ஆறு மாத காலத்திற்குள்ளாக இந்திய நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடப்பதற்கான சூழ்நிலைகள் தமிழகத்தில் உருவாகி கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலேயும் இந்த ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட கூடும், ஆனால் மாவட்ட நிர்வாகம் ஆட்சியினர் உடைய ஏவல் துறையாக மாற்றி பல்வேறு இடங்களில் பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.


 




 


அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீதும், அதிமுக கட்சி ஒப்பந்ததாரர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து அவர்களை செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. தயவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய அதிகாரிகள் நடுநிலையோட செயல்பட வேண்டும், யார் தவறுகள் செய்தாலும் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கின்ற பொழுது தவறுகள் செய்கின்றவர்கள் மீது எடப்பாடியார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்பதை அரசு அதிகாரிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையில் இருக்கக்கூடிய சில கருப்பு ஆடுகள் அதிமுக கட்சியின் பேனர்களை அகற்றுகின்றார்கள், அதேபோன்று அதிமுக கட்சியின் சுவர் விளம்பரங்களையும் அழிக்கின்றனர். அவர்கள் யார் என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவர்களைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளோம், அதிமுகவின் ஆட்சி அமைக்கின்ற பொழுது இந்த மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிற காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை அந்த கருப்பு ஆடுகளை அழைத்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அதே போன்று பல்வேறு இடங்களில் அதிமுக கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மீது போடப்படும் பொய்யான வழக்குகளை அதிமுகவினர் நேர்மையாக இந்த வாழ்க்கைகளை கையாள்வோம் எங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணையாக உள்ளார் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பேசினார்.