திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் தலைமை துணை அஞ்சல் தபால் நிலையம் இயங்கி வருகின்றது. இந்த துணை அஞ்சல் தபால் நிலையம் கிளை அம்மாபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தங்களின் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இவர்கள் ரூ.15 லட்சத்திற்கும் மேலாக சேமித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை ஒரு சில பொதுமக்கள் தனது கணக்கில் இருந்து எடுக்க தபால் நிலையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பணிபுரியும் பணியாளர் தற்போது தபால் நிலையத்தில் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். சேமித்த பணம் இல்லை என்ற காரணத்தினால் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது சம்மந்தமாக தலைமை தபால் நிலையத்தில் பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தல் பணிபுரியும் செங்கம் பகுதியை சேர்ந்த ரோகினியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.


 





தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


மேலும் உடனடியாக ரோகினியை பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கையாடல் செய்த பணத்தை திருப்பி தபால் நிலையத்திற்கு செலுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் தபால் நிலையத்தில் பணம் எடுக்க சென்றனர். அப்போது பணம் இல்லை என்றும் இதுவரையில் ரோகிணி பணத்தை செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இச்சம்பவம் அம்மாபாளையம் கிராமத்தில் காட்டு தீ போல் பரவியது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவடத்திற்கு வந்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்மந்தபட்டவர்கள் தனது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். 


 




பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகை 


இதனையடுத்து அம்மாபாளையம் கிராம பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்ணமங்கலம் காவல்நிலையத்தை முற்றகையிட்டு தபால் நிலையத்தில் தாங்கள் செலுத்தி உள்ள கணக்கு புத்தகம் மற்றும் ஆவணத்தை காண்பித்தனர். கட்டிய பணத்தை திருப்பி கேட்டதற்கு தபால் நிலைய ஊழியர்கள் எங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் தபால் நிலைய ஊழியர் ரோகிணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு ரோகிணி விரைவில் பணத்தை தபால் நிலையத்தில் செலுத்தி பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபடும் என்று தெரிவித்துள்ளதாக காவல் துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். ஆரணி அருகே தபால் நிலையத்தில் சேமிப்பு திட்டத்தில் பணத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.