’10,000 கி.மீ கிராம சாலைகள் நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்வு’- அமைச்சர் எ.வ.வேலு...!

’’தனிமனித பொருளாதாரமாக இருந்தாலும் கிராம பொருளாதாரமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரமாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது நெடுஞ்சாலைத்துறை தான்’’

Continues below advertisement

திருவண்ணாமலையில் கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டம் அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ’’தனிமனித பொருளாதாரமாக இருந்தாலும் கிராம பொருளாதாரமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரமாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது நெடுஞ்சாலைத்துறை தான்’’ என்றார். தமிழக முதலமைச்சர் 10,000 கிலோ மீட்டர் கிராம சாலைகளை நெடுஞ்சாலை சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருப்பதாகவும்.

Continues below advertisement

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கி பலியான பெண் - பதறவைக்கும் வீடியோ..!

மக்களுக்கு பயனளிக்கும் கிராம சாலைகளை கண்டறிந்து அதற்கு முன்னுரிமை அளித்து உள்ளாட்சித் துறை மூலமாக நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலமாக வருமேயானால் முதலமைச்சரின் கனவு திட்டமான நெடுஞ்சாலை துறை மூலம் தரமுள்ள சாலையாக மாற்றி காட்டுவோம் என்று கூறினார். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக முதலமைச்சர் என்று ஆணையிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறிய எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சாலைகளில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் என்றும், திருவண்ணாமலை தெற்கு, மேற்கு, சேத்துப்பட்டு, மருதாடு, வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செஞ்சி, வேலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 11 நகரங்களுக்கும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பெசன்ட் ரவியை காலி செய்த அம்ஜத்.. அடுத்த டார்க்கெட் பார்வதிதான் | Besant Ravi | Survivor zee Tamil

Continues below advertisement