காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.  இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.




இந்நிலையில் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட இடங்கள் மற்றும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும், நல்ல இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது ஆறுதலை அளிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில், விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட இருக்கும் 90 சதவீத இடங்கள் முடிவாகியுள்ளது.


ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். வேலூர் மாவட்டத்தில்  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு தென்னைமர சின்னத்திலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடங்களுக்கு கைக்கடிகாரம் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்தார். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்


முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சௌந்தர்யா குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் திருமாவளவன் வழங்கினார்.










 


 






வேலூர் மாவட்ட திமுக கூட்டணி நிலவரம்


 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இடப்பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில் ஒன்று மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 138 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் காங்கிரஸ்-3, வி.சி.க-1, சிபிஐ, சிபிஎம்-க்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யபட்டடுள்ளன. 

 

மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X